search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்மாய் பணி"

    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டை அருகே கண்மாயை ஆழப்படுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்திட தூய்மையான சுற்றுச்சூழல் மிகவும் அவசியமாகிறது.

    விருதுநகர்

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாரம் கட்டங்குடி ஊராட்சி செவல்கண்மாய் மற்றும் காரியாபட்டி வட்டாரம், துலுக்கன்குளம் ஊராட்சி கண்மாயினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறையும் இணைந்து, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கண்மாய் ஆழப்படுத்தும் பணியினை கலெக்டர் மேகநகாதரெட்டி தொடங்கி வைத்தார். மேலும் அவர் மரக்கன்றுகளை நட்டு வைத்து, பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி னார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்திட தூய்மையான சுற்றுச்சூழல் மிகவும் அவசியமாகிறது. மக்கள் சார்ந்து இருக்கும் நீர்,காற்று மற்றும் நிலம் ஆகியவற்றை ஏற்படுத்துவதிலும் தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு உரிய ஆக்கங்களை குறைப்பதிலும் சூழல் அமைப்புகள் முக்கியமான அம்சங்களாக விளங்குகிறது.

    இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பினையும் மேம்படுத்திட முதல மைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் மண், நீர் மற்றும் மழைவளத்தை பெருக்கும் பொருட்டு விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11வட்டாரங்களில் ஒரு நாற்றாங்கால் (நர்சரி) அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு குளத்துப்பட்டி ஊராட்சி செவல்கண்மாய் அருகில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட நாற்றாங்கால் (நர்சரி)யை தொடங்கி வைக்கப்பட்டு ள்ளது. மேலும், இந்த நாற்றாங்கால் (நர்சரி)யில் உருவாக்கக்கூடிய கன்றுகள் அனைத்தும் இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

    கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ்அ னைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படவுள்ள ஊராட்சிகளில் சிறுபாசன கண்மாய் - 30, ஊரணி - 7 மற்றும் வரத்துக்கால்வாய்-2 என்ற எண்ணிக்கையிலும் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக விருதுநகர் வட்டம், கோட்டநத்தம் ஊராட்சியில், இயற்கை ஆர்வலர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மியாவாக்கி முறையில் அடர்வன காடுகள் உருவாக்கும் நோக்கத்தில் மரம் நடும் பணிகளை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யா ணகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர்.எஸ்.நாராயணன், செயற்பொறியாளர் சக்திமுருகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்கதமிழ்வாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×